
posted 28th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தந்தை செல்வாவிற்கு நினைவுத் தூபி
தந்தை செல்வாவின் 46ஆவது நினைவு ஆண்டில் அவரது நினைவுத் தூபியொன்று தெல்லிப்பழையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழையில் அமைந்துள்ள சேமக்காலையில் நேற்று முன்தினம் புதன்(12) மாலை 4.30 மணியளவில் குறித்த நினைவுத் தூபி தந்தை செல்வா நினைவு அறங்காவலர் குழுத்தலைவரும் தென்னிந்திய திருச்சபையின் ஓய்வுநிலை பேராயருமான சு. ஜெபநேசனால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
கலைஞர் தவ.தஜேந்திரனால் நினைவுத் தூபி வடிமைக்கப்பட்டதுடன் இருபாலையிலுள்ள சஹானா சிற்பாலயம் சிற்ப வடிவமைப்பை மேற்கோண்டது.
இந்த நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் வே. பத்மதயாளன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, மதகுருமார்கள், தந்தை செல்வா அறக்கட்டளை அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)