
posted 11th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தங்க இடம் பார்த்தோர் தங்கநகைக் கொள்ளையராம்
களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் வீடு வாடகைக்கு தேவை என வீடு ஒன்றுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளையர்கள் அங்கு தனிமையில் இருந்த பெண்னை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ,
ஒந்தாச்சிமட பிரதேசத்தில் சம்பவ தினமான பிற்பகல் 2 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், வீடு ஒன்று வாடகைக்கு தேவை எனக் கேட்டு அங்கு 3 இளைஞர்கள் சென்று கதை கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து திடீரென பெண் மீது தாக்குதலை நடத்தி அவரின் கழுத்தில் இருந்த சங்கிலி மற்றும் கையில் இருந்த காப்பு என்பவற்றைக் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணை அயலவர்கள் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்தையடுத்து அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)