
posted 26th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சித்திரைப் புதுவருட விளையாட்டு விழா
துறைநீலாவணைக் கிராமத்திலுள்ள சகல விளையாட்டுக் கழகங்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து சோபகிருதி வருடத்திற்கான புத்தாண்டு விளையாட்டு விழாவை துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடாத்தி முடித்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய கலை கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் விளையாட்டு நிகழ்வுகளான தலையணைச் சமர், வழுக்கு மரம் ஏறுதல், தேங்காய் துருவுதல், கயிறு இழுத்தல், தோணி ஓட்டம், முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல், சாப்பாட்டு இராமன் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெற்றன.
துறைநீலாவணை விளையாட்டு கட்டுப்பாட்டுச் சபைத் தலைவரும் தொழில் நுட்ப உத்தியோகத்தருமான இ. சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல் துறை சார்ந்த பிரமுகர்கள் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)