குடும்பஸ்தர் கொலையின் பின்னைய செய்தி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

குடும்பஸ்தர் கொலையின் பின்னைய செய்தி

தென்மராட்சியில் தந்தையையே வெட்டிக் கொன்றனர் என்ற சந்தேகத்தில் 18, 19 வயதான இரு மகன்களையும் அவர்களின் 19 வயதேயான நண்பரையும் கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், கொலை தொடர்பில் முறைப்பாடு கிடைத்த 4 மணி நேரத்திலேயே பொலிஸார் துப்புத்துலக்கி சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தென்மராட்சி - மிருசுவில் - கரம்பகத்தில் நேற்று நடுச்சாமம் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

மிருசுவில் - கரம்பகத்தில் நேற்று காலை தோட்டக் காணியின் கொட்டிலில் வெட்டுக்காயங்களுடன் சிவசோதி சிவகுமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கை சேர்ந்த கொலையான நபர் கரம்பகத்தில் திருமணம் செய்து வசித்து வந்தார். குடும்ப பிணக்கு காரணமாக இரு வருடங்களின் முன்னரே அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், அவர்களின் பிள்ளைகள் இருவரும், அம்மம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தனர். எனினும், தந்தை பிள்ளைகளை பார்க்க வீட்டுக்கு செல்வது குறைவு என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில், வெள்ளி (31) காலை கொல்லப்பட்டவரின் 19 வயதான மூத்த மகன் கையில் வெட்டுக் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தந்தை வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில், மகனின் கையில் இருந்த காயம் விசாரணை நடத்திய பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனால், அவரிடம் கையில் எவ்வாறு வெட்டுக்காயம் வந்தது என்று வினவினர்.

அதற்கு அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு அடையாளம் தெரியாத சிலர் வீட்டுக்கு வந்து தந்தை தங்கியிருக்கும் இடத்தை காட்டுமாறு தன்னை அழைத்துச் சென்றனர் என்றும், தந்தை தங்கியிருந்த கொட்டிலுக்கு அண்மையாக வந்தததும் அவர்கள் தம்மை வெட்டினர் என்றும், தாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார் எனவும் கூறியுள்ளார். அத்துடன், அவர்கள் தந்தையை வெட்டிக் கொன்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஏன் பொலிஸாருக்கு தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்று, காலையில் பொலிஸார் விடயத்தை அறிந்து வருவார்கள் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

காயமடைந்தவருடன் இருந்த அவரின் நண்பர் மற்றும் காயத்துக்கு இலக்கானவரின் சகோதரனையும் பொலிஸார் விசாரித்தபோது மர்மம் வெளியானது.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடுச்சாமம் 1.30 மணியளவில் தானும், சகோதரனும், அவரின் நண்பரும் (மருத்துவமனையில் துணையாக தங்கி நின்றவர்) தந்தை தங்கியிருந்த குடிலுக்கு சென்று அவரை வெட்டிக் கொன்றனர் என்று பொலிஸாருக்கு மகன் ஒருவர் வாக்குமூலம் அளித்தார்.

மேலும், வீட்டிலிருந்து 3 கிலோமீற்ற தொலைவிலுள்ள தோட்டக் கொட்டிலுக்கு நடந்து சென்று, இரகசியமாக 19 வயதான மூத்த மகனே தந்தையை முதலாவதாக வெட்டியுள்ளாார். தந்தையின் கழுத்தில் வெட்டுக்காயம் ஏற்பட தந்தை படுக்கையிலிருந்து எழுந்துள்ளார். இதன்போது தம்பியாரும் வெட்டினார். அவர் வெட்டும்போது, தவறுதலாக அண்ணனின் கையிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர், மூவரும் சேர்ந்து அவரை கழுத்து, முகம், நெஞ்சு, கை எனப் பல பகுதிகளிலும் வெட்டிக் கொன்றதாகக் கூறினர்.

தந்தை தம்மை கொடுமைப்படுத்துவதால் அவரைத் தாங்கள் கொன்றனர் என்று பிள்ளைகள் இருவரும் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கத்திகளை அருகில் இருந்த குளத்தில் வீசப்பட்ட நிலையில் அவை பொலிஸாரால் மீட்கப்பட்டன.

இந்தக் கொலை தொடர்பில் அதிகாலை 5 மணிக்கு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9 மணியளவிலேயே கொலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னைய செய்தியை வாசிக்க இதை கிளிக் செய்யவும்>>>>கொடிகாமத்தில் குடும்பஸ்தர் கொலை

குடும்பஸ்தர் கொலையின் பின்னைய செய்தி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)