
posted 26th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கிழக்கிலும் வெற்றிகரமான ஹர்த்தால்
ஏழு தமிழ்க் கட்சிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில் நேற்று (25) அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தால் கடையடைப்பு திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் வெற்றிகரமாக இடம்பெற்றது.
இந்த மாவட்டங்களின் சில முஸ்லிம் பிரதேசங்களின் வளமை நிலை நிலவிய போதிலும் தமிழ்ப் பிரதேசங்களில் கனிசமான கடைகள் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது.
குறித்த ஹர்த்தால் கடையடைப்புக்கு ஒத்துழைப்பு நல்கிய பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சம்பந்தப்பட்ட தமிழ்க்கட்சிகள் நன்றி தெரிவித்துள்ளன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)