
posted 8th April 2023

அன்னாரின் இழப்பினால் கவலையில் ஆழ்ந்த அனைவருக்கும் தேனாரத்தின் ஆழ்ந்துள்ள அனுதாபங்கள்
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
காவு வாங்கிய கட்டுபாடற்ற வேகம்
மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் செங்கலடி - ஐயங்கேணி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய க. திபாகர் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
21 வயதுடைய இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், 10 வயதுச் சிறுவன் அடங்கலாக 4 பேர் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
செங்கலடிப் பகுதியில் இருந்து கொம்மாந்துறை பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் எதிரே வந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது தொடராக மோதியுள்ளனர்.
இதன்போது சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் வந்த 28 வயதான இளைஞன் உயிரிழந்ததுடன் ஏனையவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)