
posted 21st April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கட்டுக்கரைக்குளத்திலிருந்து முதல் நீர் விநியோகம்
மன்னார் மாவட்ட 2023ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற் செய்கைக்காக மன்னார் பிரதான கட்டுக்கரைக் குளத்திலிருந்து முதல் நீர் விநியோகம் 10.05.2023 ஆரம்பிக்கப்பட இருக்கின்றது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோகக் கூட்டமானது சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள், துறைசார், விவசாய அமைப்புக்கள் யாவருடனும் ஒன்றிணைந்து மன்னார் மாவட்டத்தில் பிரதானமாக விளங்கும் கட்டுக்கரைக் குளத்தின் நீர் அளவுக்கு அமைவாக சிறுபோகம் தொடர்பான கூட்டம் மன்னார் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில் புதன்கிழமை (19) நடைபெற்றது.
இக் கூட்டத்தில் ஆலோசனைகள் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டபோது இந் நடப்பு வருட நெற் செய்கையில் 3 , 3 ½ மாத நெல்லினம் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
முதல் நீர் விநியோகத் திகதி 10.05.2023, விதைப்பு இறுதித் திகதி 10.06.2023, காப்புறுதி செய்யப்பட வேண்டிய இறுதி திகதி 10.06.2023, முறைத்தண்ணீர் ஆரம்பத் திகதி 11.06.2023, இறுதி விநியோகத் திகதி, 08.09.2023, அறுவடை இறுதித் திகதி 15.10.2023 என உத்தேச பயிர் செய்கை கால அட்டவணையாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.
இம்முறை சிறுபோக நெற் செய்கை 3665 ஏக்கரில் செய்கைப்பண்ணப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)