ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புக்குள் நெற்செய்கையில் ஈடுபடுங்கள் - இஸட் இப்றாகிம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புக்குள் நெற்செய்கையில் ஈடுபடுங்கள் - இஸட் இப்றாகிம்

மன்னாரில் சிறுபோகம் செய்வோர் வழங்கப்பட்ட நிலப்பகிர்வைக் கொண்டு நெற்செய்கையை மேற்கொள்ளுங்கள். இதைவிடுத்து மறைமுகமாக விவசாயிகள் ஈடுபடும்பட்சத்தில் நீர் வழங்கலில் சிரமம் ஏற்படுவதுடன் நாம் உயர் மட்டங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது என மன்னார் வவுனியா நீர்பாசன பணிப்பாளர் எந்திரி எம்.ஐ.எம். இஸட் இப்றாகிம் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற் செய்கை தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற விவசாயக் கூட்டத்தில் மன்னார் வவுனியா நீர்பாசன பணிப்பாளர் எந்திரி எம்.ஐ.எம். இஸட் இப்றாகிம் இங்கு விவசாயிகள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில்;

இந் நடப்பு வருடமாகிய 2023 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்திலுள்ள பிரதானமாக விளங்கும் கட்டுக்கரைக் குளத்தின் கீழ் மேற்கொள்ளப் போகும் சிறுபோகம் நெற்செய்கைக்கு இறைவன் கைகொடுத்துள்ளார்.

கட்டுக்கரைக் குளத்தின் நீர் மட்டத்தை கவனத்தில் வைத்துக் கொண்டே வருடந்தோறும் மன்னாரில் சிறுபோகம் செய்வது வழமையாகும்.

இந்த வருடம் (2023) 15 ஏக்கர் நெற்காணி வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஏக்கர் காணியிலேயே நெற்செய்கை செய்ய நேரிடுமோ என எண்ணப்பாட்டில் இருந்தபோது கட்டுக்கரைக் குளத்தின் நீர் மட்டம் 11.6 அடி நீர் கொளவனவு கொண்ட குளமாக இருக்கின்றபோதும் தற்பொழுது 11.4 அடி நீர் (அதாவது 30194 ஏக்கர் நீர்) தற்பொழுது காணப்படுவதால் 10 ஏக்கர் கொண்டவர்களுக்கு ஒரு ஏக்கர் ஈவின்படி நெற்செய்கை பண்ணக்கூடிய நிலை காணப்படுவது மகிழ்ச்சிக்குரியது.

இந்த நெற் செய்கையில் ஈவை விட்டு பொதுத் தேவைக்கென கடந்த காலத்தில் ஏக்கர் பிரமாணங்கள் மறைமுகமாகவும் வழங்கப்பட்டு வந்துள்ளது.

இதனால் வழங்கப்பட்டு வந்த நீரின் அளவையும் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கையையும் உயர் மட்டத்தில் கணக்கெடுக்கப்பட்டு எங்களிடம் கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இம்முறை மறைமுகமாக பொதுத் தேவைகளுக்கென மேற்கொள்ளப்பட்ட ஏக்கர் பிரமாணங்கள் வெளிக்கொணரப்பட்டு 296 ஏக்கரில் செய்கைப்பண்ணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டதுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

ஆனாலும், இன்னும் சில ஏக்கரில் மறைமுகமாக செய்கைப்பண்ணுவதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக எமக்கு தெரிய வந்துள்ளது. இதனால், கூடிய நீரில் குறைந்த விவசாய நெற்செய்கை பண்ணப்படுகின்றது என்ற குற்றச்சாட்டும் உயர் மட்டத்திலிருந்து எமக்கு கிடைக்கப் பெறுகின்றது எனத் தெரிவித்தார்.

மன்னாரில் எவ்வளவு விவசாய நிலம் இருக்கின்றது. சிறுபோகம் பெரும்போகம் எவ்வளவு செய்யப்படுகின்றது என்பது வெளிச்சமாக இருக்கின்றது. ஆகவே, விவசாயிகள் வெளிப்படை இல்லாமல் பிழையான வழிகளில் நெற்செய்கைப் பண்ணுவதை தவிர்ப்பது நலம் என மேலும் தெரிவித்தார்.

ஒதுக்கப்பட்ட நிலப்பரப்புக்குள் நெற்செய்கையில் ஈடுபடுங்கள் - இஸட் இப்றாகிம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)