
posted 20th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
எருக்கலம்பிட்டி தபாலகத்தில் இப்தார் நிகழ்வு
உலகம் பூராகவும் நோம்பு அனுஷ்டித்துவரும் இஸ்லாமிய மக்கள் இலங்கையில் தற்பொழுது வியாழக் கிழமை (20) 28 வது நோம்புத் தினத்தை அனுஷ்டித்தனர்.
இந்நாளில் மன்னார் எருக்கலம்பிட்டி தபால் நிலையத்தில் இவ்அலுவலக பொறுப்பு தபால் அதிபர் திருமதி ஜே.என்.எஸ். லியோன் தலைமையில் இப்தார் நிகழ்வு நடாத்தப்பட்டது.
வியாழக்கிழமை (20) எருக்கலம்பிட்டி தபால் நிலைய மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு மன்னார் தபால் அத்தியட்சகர் டீ.எம். ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மன்னார் தபால் திணைக்களத்தை சார்ந்தவர்கள், பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், உலமாக்கள், மௌலவிமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)