
posted 23rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உலகளாவிய ரீதியில் முதலாவது இடம்
சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் மாணவன் அல்-ஹாபிழ் ஜௌபர் பிக்ரி அகம்மட் அண்மையில் சவூதி அரேபிய றியாத் நகரில் இடம்பெற்ற சர்வதேச திருக்குர்ஆன் மனனப் போட்டியில் உலகளாவிய ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்று நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும், சம்மாந்துறை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இம்மாணவரை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெளிவிவகாரப் பிரிவுப் பணிப்பாளரும், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான அல் ஹாஜ் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் அழைத்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவித்தார்.
இந்த மாணவரை சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)