
posted 7th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி டில்லியில் இந்து அமைப்புகள் போராட்டம்
இலங்கைத் தமிழ் இந்துக்களுக்கு நீதி கோரி டில்லியில் இந்து அமைப்புகள் போராட்டம் ஒன்றினை நேற்று முன்தினம் (05/04/2023) முன்னெடுத்திருந்தன. இதில் ஆலயங்கள் இடிக்கப்படுவது மற்றும் இந்துக்களுக்கு தீங்கு இழைக்கப்படுவது ஒரு கலாசார இனப்படுகொலை எனவும் இந்து அமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் கட்டுமானப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் பழங்கால கோயில்கள் அரசால் தொடர்ந்து இடித்துத் தள்ளப்பட்டு வருகின்றன. பழங்கால வரலாற்று மற்றும் சமய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில்கள் அரசு இடித்து அழித்து வருவது இந்து தமிழ் சமூகத்தின் கலாச்சார இனப்படுகொலையை இலங்கை அரசு செய்து வருவதாக தெரிகிறது.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் உலகெங்கிலும் உள்ள இந்து அமைப்புகள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அரசு தொல்லியல் ஆய்வு, வளர்ச்சி மற்றும் உற்பத்தி பணிகள் என்ற பெயரில் கோவில்களின் தோற்றத்தை கெடுத்து, அவற்றை இடிப்பது சகிக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது.
இந்துப் போராட்டக் குழுவின் சர்வதேசத் தலைவர் ஸ்ரீ அருண் உபாத்யாய், இது இந்துக்களுக்கும், இந்தியாவுக்கும் எதிரான தீங்கிழைக்கும் செயல் என்று வன்மையாகக் கண்டித்துள்ளார். மேலும் இந்திய அரசும் இந்தப் பிரச்சினையை உணர்ந்து இந்தியா செல்ல இருக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக ஆட்சேபிக்க வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)