
posted 16th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இரு நாடுகளுக்கும் பொறுப்புள்ளது
13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் இந்திய அரசு, இலங்கைஅரசு இரு நாடுகளுக்கும் பொறுப்புள்ளது. இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அரசியல் பிரமுகருமான இரா துரைரத்தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றின் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ் மக்கள் உள்ள நிலையில் ஏதாவதொரு இனப்பிரச்சினை தொடர்பான சாத்தியமான விடயத்தை அமுல்படுத்துவதில் அக்கறை காட்டவேண்டும்.
குறிப்பாக, சாத்தியமான விடயம் 13ஆவது திருத்தச்சட்டம் மட்டுமே. இவ் விடயத்தையாவது 1990ம் ஆண்டு ஏற்றுக் கொண்டிருந்தால் இன்றுள்ள நிலைமையை விட கொஞ்சம் அதிகமான விடயங்களை பெற்றிருக்க முடியும்.
குறிப்பாக, காணி, பொலிஸ், நிதி, நீதி, வடக்கு கிழக்கு இணைப்பு, பிரதேச செயலக நிருவாகம் இப்படி பல முக்கியமான விடயங்கள் கைநழுவிப் போன நிலையில் தாமதம் ஆகஆக இன்னும் பல விடயங்கள் நடைமுறை ரீதியாக குறைக்கப்படும். கையிலிருப்பதை வைத்துக்கொண்டு உள்ளதை அரசிடம் கேட்டு அமுல்படுத்த வேண்டும்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)