இராணுவ முகாம் அகற்றப்படுமா?

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இராணுவ முகாம் அகற்றப்படுமா?

நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையால் பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற 100000 அமெரிக்க டொலர் நிதியைக் கொண்டு நிந்தவூர் பிரதேச சபைக்கு சொந்தமான பிரதேச சபையின் பழைய கட்டடம் அமைந்துள்ள இடத்தில் பண்ணை தொழிலாளர்களின் மேம்பாட்டிற்கான வர்த்தகக் கட்டட தொகுதியை அமைப்பதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் பிரதேச சபையின் பழைய கட்டிடத்தில் அமைந்திருக்கின்ற இராணுவ முகாமை அகற்றுவதற்கான முன்னெடுப்புக்களின் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மினி அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை நேரில் அழைத்து வந்து பார்வையிட்டார்.

இதன் போது இராணுவ உயர் அதிகாரி, அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர், நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல். அப்துல் லதீப், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபையின் கௌரவ முன்னாள் உறுப்பினர்களென பலரும் கலந்து கொண்டனர்.

இராணுவ முகாம் அகற்றப்படுமா?

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News