
posted 16th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவி
இலங்கை மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்திய துணைத் தூதரகம் வட மாகாணத்தில் உள்ள 500 குடும்பங்களுக்கு ஏப்பிரல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் உலர் உணவுகளை விநியோகித்துள்ளது.
அதாவது ஏப்பரல் 12 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் 125 குடும்பங்களுக்கும், மன்னாரில் 100 குடும்பங்களுக்கும், ஏப்பிரல் 13 ஆம் தேதி கிளிநொச்சியில் 75 குடும்பங்களுக்கும், வவுனியாவில் 100 குடும்பங்களுக்கும், முல்லைத்தீவில் 100 குடும்பங்களுக்கும் இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
வழங்கப்பட்ட இவ் உலர் உணவுப் பொதிகளுக்காக ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சிவசக்தி அனந்தன் ஆகியோர் இந்திய அரசாங்கத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)