வாளால் வெட்டி வயோதிபத் தம்பதியிரிடம் கொள்ளை

வீட்டில் தனித்திருந்த வயோதிப தம்பதியர் மீது வாள்வெட்டு நடத்திவிட்டு அவர்களிடமிருந்து நகையும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று ஞாாஞாயிற்றுக்கிழமை அதிகாலை முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இந்சத் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,

தேவிபுரம் மஞ்சள் பாலத்துக்கு அருகில் வீடுஒன்றில் வயோதிப தம்பதியர் தனியாக வசித்து வந்தனர். இவர்களின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் மூதாட்டியின்மீது சரமாரியான தாக்குதல் நடத்தியதுடன், முதியவரையும் வாளால் வெட்டி காயப்படுத்தினர்.

இதன் பின்னர், மூதாட்டி மஞ்சள் கயிற்றில் அணிந்திருந்த தாலியை பறித்தவர்கள், அங்கிருந்து பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றனர்.

கிராம அமைப்புகளின் உதவியுடன் வயோதிபர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாளால் வெட்டி வயோதிபத் தம்பதியிரிடம் கொள்ளை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)