
posted 11th April 2022
மட்டக்களப்பு ஸ்ரீ ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.
இந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 16 ஆம் திகதி (சனிக்கிழமை) இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் ஆலய உற்சவம் நிறைவு பெறவுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.
இவ்வுற்சவத்தின் போது 14 ஆம் திகதி திருவேட்டைத் திருவிழாவும், 15 ஆம் திகதி இரதோற்சவமும் நடைபெறவுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம்