
posted 15th April 2022
யாழ்.குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் இன்று (15.04.2022) மாலை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாராதனையில் ஆண்டவரை சிலுவையில் அறைந்து இறைமகன் இயேசு சிலுவையில் மரிக்கும் காட்சியைத் தொடர்ந்து அவரின் உடலை சிலுவையில் இருந்து இறக்கி மக்கள் அஞ்சலிக்காக ஆலயத்துக்குள் எடுத்துச்செல்லும் காட்சியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிகமான மக்கள் மிகவும் பக்தியோடும் இறை பற்றோடும் கலந்து கொண்டு இறைவன் இயேசுவின் ஆசீரையும் பெற்றனர்.

எஸ் தில்லைநாதன்