
posted 8th April 2022
இன்றையதினம் வெள்ளிக்கிழமை யாழில் இடிமின்னலுடன் மழையுடன் கூடிய காலநிலை நிலவியது. இதன்காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்தது.
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது மதியமளவில் மின்னல் தாக்கியதால் வீடானது பகுதியளவில் சேதமாகியுள்ளது.
எனினும் இந்த அனர்த்தத்தினால் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் எவையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய