
posted 4th April 2022
மட்டக்களப்பு மாவட்டம் ஊரடங்கு காரணமாக நேற்று(03) முற்றாக முடங்கியுள்ளதுடன், பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக அரசாங்கத்தினால் நேற்று முன்தினம்(02) மாலை 6.00 மணி தொடக்கம் இன்று அதிகாலை 6.00 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முற்றாக முடங்கியுள்ளது, எனினும் அத்தியாவசிய சேவைகளுக்குச் செல்வோர் பயணிக்க பாதுகாப்புத் தரப்பினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
மட்டக்களப்பு நகர் உட்பட புறநகர் பகுதிகளிலும் பொலிசார் விஷேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களைத் தத்தமது வீட்டிலேயே இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் பொலிசாரால் அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துக்கள் முற்றாக முடங்கியுள்ளதுடன், ஒரு சில அரச போக்குவரத்துச் சேவைகள் மட்டும் அத்தியாவசிய சேவையினைக் கருத்திற் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பி டத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய