
posted 8th April 2022
வவுனியாவில் மின்சாரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்தார்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்றுவியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள தோட்டக் காணி ஒன்றில் வெங்காயத்துக்கு ஒருவர் நீர் இறைத்துக்கொண்டிருந்தபோது, மற்றொருவர் மின்சார வயரின் உதவியுடன் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
இதன்போது, மின்சார வயரில் இருந்து மின் தாக்கியதில் குறித்த இளைஞன் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
22 வயதுடைய செல்வராசா கேதீஸ்வரன் என்ற இளைஞனே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய