பேராளுமை மறைவு
பேராளுமை மறைவு

பேராசிரியர் சோ. சந்திரசேகரம்

இலங்கையின் மலையகம் தந்த கல்விப் பேராளுமையும் சிறந்த சிந்தனாவாதியுமான பேராசிரியர் சோ. சந்திரசேகரம் திங்கள் (04) அன்று காலமானார்.

கல்வியியல் துறையில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்து பல தசாப்தங்களாக சேவை செய்த பெருமகனான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பீடாதிபதியாக பதவி வகித்து, ஓய்வு பெற்றா.

அதன்பின் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் போன்ற பல முக்கிய பதவிகளையும் வகித்து வந்தார்.

மலையக மக்களுக்கென்று தனியான பல்கலைக்கழகம் வேண்டுமென்ற கோரிக்கையினை நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த அவர், மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுக்கும் இயக்கங்களுடன் தன்னை அடையாளப்படுத்தி பல பணிகளை முன்னெடுத்து வந்தார்.

கல்வியியல் துறை பிரச்சினைகள் பற்றி எண்ணற்ற கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதிவந்த அவர் பல நூல்களையும் எழுதியுள்ளார்.

தமிழ்ச் சமூகம் தலைசிறந்த கல்விமானை இழந்து நிற்பதுடன் அவரது மறைவு கல்வி உலகிற்கு பேரிழப்பாகும்.

பேராளுமை மறைவு

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய