
posted 3rd April 2022
நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஊரடங்கு நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி, நாளை காலை 6மணிக்கு முடிவுறுமென்று அறிவிக்கப்பட்ட போதிலும், நாட்டின் பல இடங்களிலும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் நடந்தேறிவண்ணம் உள்ளதை அவதானிக்க முடிந்தது.
இந்த ஊரடங்கிற்கு முன்னதாக நடந்தேறிய ஊர்வலங்கள் அலரி மாளிகைச் சுற்றிவளைப்பு, அதன்பின்பு ஒழுங்குபடுத்தப்பட்ட அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை முறியடிக்குமுகமாகத்தான் இந்த அவசரகால ஊரடங்கு என்பது அரசாங்கத்தின் பக்கமிருந்த கருத்தாகவும் அறியப்பட்ட நிலையில், இன்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் நடந்தேறிய மாணவர்களின் இந்த ஊர்வலத்தை இங்கு அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

ஏ.எல்.எம். சலீம்
