
posted 12th April 2022
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ச. பாலகுமார் 53 வயதில் இன்று செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.
வடமராட்சியைச் சேர்ந்த பேராசிரியர் பாலகுமார் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்துறைத் தலைவர் மற்றும் பீடாதிபதி போன்ற பல தலைமைத்துவச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கியிருந்தார்.
மாணவர்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் சிறந்த நிர்வாகியாகவும் விளங்கிய அவரின் இழப்பு யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைக்கு பேரிழப்பாகும் என்று சக பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

எஸ் தில்லைநாதன்