பேசாலை பங்கில் பாஸ்கா மறைநிகழ்வு
பேசாலை பங்கில் பாஸ்கா மறைநிகழ்வு

கிறிஸ்து அண்டவர் தமது பாஸ்கா மறைநிகழ்வை நிறைவு செய்ய எருசலேமுக்குள் நுழைந்ததைத் திரு அவை உலகம் பூராகவும் ஞாயிற்றுக்கிழமை (10.04.2022) நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றது

இந் நிகழ்வு மன்னார் மறைமாவட்டத்தின் கத்தோலிக்கர் செறிந்து வாழும் ஆதி பங்குளில் ஒன்றான பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்திலும் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் முக்கியமாகபாகமாக, திருப்பலிக்குமுன், இறைவனாம் இயேசுநாதரின் திருச்சிலுவைப் பவனி இடம்பெற்றது. தலைமன்னார் மன்னார் வீதியில் அமைந்துள்ள விக்ரறிஸ் வளாகத்திலிருந்து புனித வெற்றி அன்னையின் ஆலயம் நோக்கி இப்பவனி கொட்டும் மழையிலும் இடம்பெற்றது.

இவ் பவனியின்போது பேசாலை உதவி பங்கு தந்தை அருட்பணி எஸ். டிக்சன் அடிகளார் சிவப்பு நிறத் திருபோர்வை அணிந்து செல்ல, பக்தர்கள் கையிலே குருத்தோலைகளை ஏந்தியவர்களாக “தாவீது மகனுக்கு ஓசன்னா” என முழங்கி வந்து திருப்பலி திருப்பலி நிறைவேற்றலுக்கு ஆலயத்துள் நுழைந்தார்கள்.

இத் திருப்பலியை பேசாலை உதவி பங்கு தந்தை அருட்பணி எஸ். டிக்சன் அடிகளார் தலைமையில் பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் மற்றும் அருட்பணி ஜெரோம் லெம்பேட் அடிகளார் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

இதில் கலந்து கொண்ட பக்தர்களின் ஒரு பகுதினரையும் படங்களில் காணலாம்.

பேசாலை பங்கில் பாஸ்கா மறைநிகழ்வு

வாஸ் கூஞ்ஞ