
posted 27th April 2022
இறை இரக்கத்தின் பெருவிழா கத்தோலிக்க இறை மக்களால் வருடந்தோறும் கொண்டாடப்பட்டுவரும் விழாவாகும். இப்பெருவிழாவானது 24.04.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பங்கிலுள்ள 100 வீட்டுத்திட்டத்தில் அப்பகுதியில் வாழும் இறை மக்களால் கொண்டாடப்பட்டது.
இப்பெருவிழாவின் திருப்பலியை பேசாலை பங்குத் தந்தையும், மன்னார் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் ஒப்புக்கொடுத்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)