
posted 8th April 2022
வட்டுக்கோட்டை, துணைவி பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இன்னொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நவாலியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்றுவிட்டு தங்களது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்களது மோட்டார் சைக்கிள் துணைவி வீதியில் உள்ள மரத்துடன் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் பின்னால் இருந்த இளைஞன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அராலி - செட்டியார் மடம் பகுதியைச் சேர்ந்த புலேசாந் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய