
posted 14th April 2022
தமிழரசுக்கட்சியின் அல்வாய் கிழக்கில்அமைந்துள்ள வடமராட்சி கிளை அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற புத்தாண்டுப் பொங்கல் நிகழ்வில்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரான யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் பொங்குவதைப் படஙகளில் காணலாம்.
இலங்கை தமிழரசு கட்சியின் பொங்கல் விழா இன்றைய தினம் வடமராட்சியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம் ஏ சுமந்திரன் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் அ.ச அரியகுமார், நகரசபைத் தவிசாளர் திரு இருதய ராசா, கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் திரு ஐங்கரன், இலங்கை தமிழரசு கட்சியின் தொகுதி நிர்வா நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் இந் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் கைவிசேஷம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்