
posted 27th April 2022
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டியில் பருத்தித்துறை சென்தோமஸ் விளையாட்டு கழக அணி சம்பியனாகியது.
இதன் இறுதியாட்டம் 23.04.2022 அன்று அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் பருத்தித்துறை சென்தோமஸ் அணியை எதிர்த்து பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணி மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை சென்தோமஸ் அணி வழங்கப்பட்ட 40 பந்துகளில் 2 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணி வழங்கப்பட்ட 40 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றனர்.
இதனால் பருத்தித்துறை சென்தோமஸ் அணி வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)