
posted 19th April 2022
காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் தன்னெழுச்சிப் போராட்டம் 11 வது தினமாகவும் இன்று செவ்வாய் உணர்வு பூர்வமாக இடம்பெற்று வரும் நிலையில் நாடளாவிய ரீதியில் இன்று மக்கள் போராட்டங்கள் பல இடம்பெற்றன.
ஜனாதிபதி கோட்டா பதவி விலகுவதுடன் அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்த நிலையில் இன்று திடீர் எரிபொருள் விலையேற்றத்தால் சீற்றமடைந்த மக்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் அரசுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டங்கள் குறிப்பாக ரம்புக்கன ஹட்டன், டிக்கோயா, ஹிங்குராக்கொட, பண்டாரவல, இரத்தினபுரி, காலி, தங்காலை, மாத்தறை முதலான பிரதேசங்களில் இந்த ஆர்பாட்டங்கள் தீவிரமாக இடம்பெற்றன.
ரம்புக்கனையில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் ஏற்பட்ட மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாகவும் சுமார் 7 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)