
posted 21st April 2022

முபாரக் அப்துல் மஜீத்
இந்த அரசுக்கு ஆதரவளிக்கும் படி ரவூப் ஹக்கீம்தான் தம்மை ஊக்குவித்ததாகவும் ஏற்கனவே ஹக்கீம், ஜனாதிபதி கோட்டாபயவுடன் தனக்குத்தேவையானதை வைத்து ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் பிபிசி தமிழ் சேவைக்கு பகிரங்கமாக சொல்லியிருப்பது பற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக விளக்கமளிக்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
இது தொடர்பாக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;
ஹாபிஸ் நசீர் அஹமத் உட்பட முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20க்கு ஆதரவளித்த போது கட்சித்தலைவர் சொன்னதன்படியே ஆதரவளித்ததாக ஹாபிஸ் உட்பட எச் எம் எம் ஹரீசும் பகிரங்கமாக தெரிவித்தனர்.
அவர்கள் இவ்வாறு சொல்லி ஒரு வருடம் தாண்டியும் இக்கூற்றை ரவூப் ஹக்கீம் மறுக்கவில்லை. மாறாக ஏதோதோ சொல்லி சமாளித்திருந்தார்.
இப்போது அமைச்சர் ஹாபிஸ் அவர்கள் இது விடயங்களை பகிரங்கப்படுத்தியுள்ளதுடன் 20க்கு ஆதரவளிக்கு முன்பே பெசில் மற்றும் கோட்டாபயவுடன் ரவூப் ஹக்கீம் இரகசிய உடன்பாடு செய்ததான குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது என்பதுடன், இப்படியெல்லாம் செய்து விட்டு ஒன்றும் தெரியாத நல்ல பிள்ளை போன்ற ரவூப் ஹக்கீமின் இச்செயல் முஸ்லிம் சமூகத்துக்கு மிக மிக கேவலமானது என்பதால் நாம் இது பற்றிய பகிரங்க விளக்கத்தை ஹக்கீமிடம் கோர வேண்டியுள்ளது.
ஆகவே, இது பற்றிய உண்மையான விளக்கத்தை ஹக்கீம் இறைவன் மீது ஆணையிட்டு சொல்ல வேண்டும் என நாம் கேட்பதுடன் இல்லாவிட்டால் அமைச்சர் ஹாபிஸ் அரசுக்கு ஆதரவு தெரிவித்தது கட்சியின் அனுமதி பெற்றார் என்பது உறுதிப்படுத்தப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY