
posted 21st April 2022
ஈஸ்டர் தாக்குதலை மனிதாபிமானமுள்ள எந்த மனிதனாலும் ஏற்க முடியாது இதற்குரிய முழு பொறுப்பையும் கடந்த நல்லட்சிக்காரர்களே ஏற்க வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி - உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது,
எவ்வாறு தமிழ் பயங்கரவாதிகள் 1990ம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் நுழைந்து தொழுது கொண்டிருந்த நூற்றுக்கனக்கான அப்பாவிகளை கொன்றதை ஏற்க முடியாதோ அதே போன்ற ஈனத்தனமான செயலே இதுவாகும்.
ஈஸ்டர் தாக்குதலை செய்தோர் முஸ்லிம் சமூகத்தை சேந்த சில கயவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக முஸ்லிம் சமூகம் இன்று வரை பாரிய விலைகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியை கடந்த நல்லாட்சி அரசு கண்டு பிடிக்க முடியாமல், அல்லது கண்டு பிடிக்க விரும்பாமல் வெறுமனே சமயத்தின் மீதும், தவ்ஹீதின் மீதும் சாட்டி தப்பிக்கொண்டது. இன்னமும் அதே நிலையிலேயே உள்ளது.
இந்த தாக்குதலை இயக்கியோர் யார் என்பது கண்டறியப்பட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் சமய பற்றுள்ளவர்களோ அல்லது தவ்ஹீத் பிரச்சாரம் செய்பவர்களாகவோ நாட்டில் அறியப்பட்டிருக்கவில்லை. ஸஹ்ரான் ஒரு ஊர்ச்சண்டியனாக குழப்பக்காரனாகவே அறியப்பட்டிருந்தான்.
ஈஸ்டர் தாக்குதலை செய்தது ஸஹ்ரான் கோஷ்டி என்பதை முழு உலகமும் அறியும். யாரின் ஆட்சியின் பாதுகாப்பில் நடந்தது என்பதுதான் முக்கியமானது. பலரும் இந்த உண்மையை திசை திருப்ப முனைகின்றனர்.
இது விடயத்தில் எமது கேள்வி என்னவென்றால் இந்தளவுக்கு தாக்குதல் செய்வதாயின் அதற்கு கடந்த அரசின் அரசியல் அதிகாரங்களின் ஒத்துழைப்பு இன்றி நடத்த முடியுமா?
அந்த அரசுக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்பதை ஒரு பேச்சுக்கு ஏற்றுக்கொள்வோம். ஈஸ்டரை தொடர்ந்து மினுவாங்கொடை, நீர்கொழும்பு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடக்கும் போது கூட அந்த அரசுக்கு தெரியாதா?
ரம்புக்கனையில் அத்துமீறியோரை இந்த அரசின் பொலிஸ் சுட்டுள்ளது.
ஆனால் அந்த ஆட்சியில் தொடர்ச்சியாக பல நாட்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடந்த போதும் ஒருவனையாவது பொலிஸ் சுட்டதா? இல்லை.
அப்படியாயின் நல்லாட்சி அரசே இவற்றின் பின்னால் இருந்துள்ளது என்பதையும் அந்த அரசின் அதிகாரத்தில் உள்ளோரே இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பதை மூளையால் சிந்திப்போர் புரிவர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY