நாளைய போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது - சிவாஜிலிங்கம்

நாளைய வியாழக்கிழமை … போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது என்றும் ஆட்சியாளர்களிடமிருந்து எதுவும் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான எம் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு;

இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷவுக்கு எதிராகவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அரசாங்கத்திற்கும் எதிராகவும் தொடர்ச்சியாக மூன்றாவது வாரமாக மாபெரும் போராட்டங்கள் தெற்கிலே வெடித்திருக்கக்கூடிய சூழ் நிலையிலே, பல்லாயிரக்கணக்கானவர்கள் கொழும்பு பிரதான வீதிகளிலே, அதேபோல கண்டியிலிருந்து பேரணிகள், பல்வேறு மாவட்டங்களிலே நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நிலமையிலே ஆர்ப்பாட்டங்கள், இடம்பெற்று வருகின்ற நிலையில் காலிமுகத்திடலில் குழுமி இருந்து கொண்டிருக்கக்கூடிய நிலைமையிலே அடிக்கடி முழு நாட்டுக்குமான ஒரு பொது வேலை நிறுத்தத்தை அழைப்பிலே நாங்கள் இணைந்து கொள்வதா இல்லையா என்ற ஒரு கேள்வி எழுகிறது?

இதிலே எங்களுடைய பிரதானமான எந்த கோரிக்கைகளும் இல்லாமல் இதில் ஆகக்குறைந்தது பங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை, இது போன்ற கோரிக்கைகள் எதுவும் இல்லாமல் நாங்கள் இவர்களுடன் சேர்ந்து இழுபட்டு கொண்டு போவதில் எந்த பிரயோசனமும் இல்லை.

இதைவிட இன்னொரு விடயத்தையும் வர்தகதகளுக்கு நாங்கள் சொல்ல விரும்புகிறோம்.

நீங்கள் இந்த விலையேற்றத்தை பயன்படுத்தி வர்த்தக சமூகத்திலேயே ஒரு கணிசமான பகுதியினர் விலை அதிகரிப்பு, பதுக்கலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆகவே, அதை நீங்கள் சீராக செய்து எங்களுடைய மக்களுக்கு கிடைக்கின்றதை பகிர்ந்து கொடுக்க கூடிய விதத்தில், விலை ஏற்றம் இல்லாமல், மோசடி இல்லாமல், பதுக்கல் இல்லாமல் செய்தாலே அதுவே இந்த போராட்டத்திற்கான ஆதரவாக அமையுமே ஒளிய, நீங்கள் ஏதோ கடையை பூட்டிவிட்டு இன்னும் பூட்டிய கதவுக்கு பின்னால் இன்னும் மோசடிகளை ஒரு சிலர் செய்கின்ற (ஏல்லோரையும் நாங்கள் சொல்லவில்லை) இதை நீங்கள் செய்யாமல் வெறுமனே கடையடைப்பு செய்து நாங்கள் இந்த பிரச்சினைகளில் இழுபட்டுக்கொண்டு போவதில் அர்த்தமில்லை.

ஆகவே, தொடர்ச்சியாக வரப்போகிறது. போர்காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட எங்களுடைய பொருளாதாரம் இப்பொழுதும் அண்மைக் காலங்களிலும் பல தடவைகள் நாங்கள் கூட பொது முழு கடையடைப்பை கோருவதிலே தவிர்த்துக் கொண்டோம். ஏனென்றால், மக்கள் நொந்து போயிருக்கிறார்கள். ஆகவே, இந்த சூழ்நிலையிலே எங்களுடைய இறுக்கமான சில கோரிக்கைகளை வலியுறுத்தி, இவ்வாறன விடயங்களை செய்வதை விடுத்து, முழு நாட்டிற்குமான, முழு ராஜபக்ச குடும்பம் சென்றவுடன் விலைவாசிகள் எல்லாம் கீழே வந்துவிடுமா? இல்லை. இவர் போய் அவர் வந்தவுடன், அவர்கள் ஏதோ வெட்டி விழுத்த போகிறார்களா? ஏன் மகாநாயக்க தேரர்கள் இப்பொழுது சொல்கிறார்கள் தங்களுடைய மகா, சங்கத்தினுடைய சங்க பிரகடனத்தை தாங்கள் செய்வோம் என்று. ஆகவே, தமிழ் மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட பொழுது தேடி வராதவர்கள், எங்களுக்கு அநீதி கிடைக்கின்ற பொழுது எதுவும் சொல்லாதவர்கள் இந்த விஷயங்களிலே எங்களுக்கு ஏதாவது கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்ப்பது ஒரு அர்த்தமற்ற விடயம்

ஆனால் அதிலே சில விடயங்களை புகுத்தி பேரம் பேச வேண்டிய தேவைகள் இருக்கின்றன. ஆகவே, அதை அவர்கள் அரசியல் தலைமை தமிழ் தேசிய அணியை சேர்ந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் அனுப்பியிருக்கிறார்கள். ஆகவே அந்த பிழைகள், சரிகள் ஏல்லாவற்றையும் அவர்கள் பார்ப்பார்கள்.

ஆகவே அதை அவர்கள் பார்க்கட்டும். ஆகவே, அதை விடுத்து வெறுமனே முழு அடைப்பின் மூலம் அவர்களுக்கு அங்கே ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டு அவர்கள் விட்டுச் செல்லப் போவதுமில்லை. வருபவர்களும் எங்களுக்கு தூக்கி தர போறவர்களும் அல்ல.

ஆகவே இந்த விடயத்தில் நொந்து போயிருக்க கூடிய நாட்கள் கூலிகள். சாதாரண மக்களுடைய எல்லாவற்றையும் சிந்தித்து நாங்கள் இதிலே ஒதுங்கியிருந்தால் தான் ஏன் நீங்கள் ஒதுங்கி இருக்கிறார் என்ற கேள்வியோடு அந்த தலைமை வருகின்ற பொழுது எங்களுடைய பேரங்களை பேசுவதற்கு இலகுவாக இருக்கும். உதவியாக இருக்கும் என்று கூறிக்கொண்டு இங்கே இருக்க கூடிய விநியோகங்களை, அது எல்லா எரிபொருள் உட்பட அத்தனை விநியோகங்களையும் சீராகவும், சகல மக்களுக்கும் சென்றடையக் கூடிய விதத்திலே எள்ளென்றாலும் எட்டாக பிரித்து பங்கிடுங்கள் என்று சொல்வதை போல அதை கிடைப்பதை சரியாக பங்கிட்டு மக்களுக்கு மேலும் மேலும் அழுத்தங்களை அல்லது கஷ்டங்களை கொடுக்காமல் நாங்கள் செய்து ஒரு சிறந்த நிர்வாகத்தை செய்து காட்டுவது தான் அது ஒவ்வாருவரும் சுய கட்டுபாட்டோடு ஒவ்வொரு வர்த்தகரும், ஒவ்வொரு பொது மக்களும் இது வெறுமனே வர்த்தகர்கள் மாத்திரம் குறை சொல்லி பயனில்லை. பொது மக்களும் தான் இதற்கு உடந்தையாக இருக்கின்றார்கள்.

ஆகவே எல்லோரும் இவ்வாறு செய்வது மிகவும் போசமான நிலமையென்று புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமேயொழிய இது இன்னும் வரப்போகிறது. ஆகவே இதை எல்லாம் நீங்கள் கலவைப்படாமல் மக்கள் நீங்கள் செயற்பட வேண்டும் ஏன்பதுதான் என்னுடைய தாழ்மையான பணிவான கருத்து என்றார்.

நாளைய போராட்டத்திலிருந்து தமிழ் மக்கள் ஒதுங்கியிருப்பதே நல்லது - சிவாஜிலிங்கம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)