
posted 3rd April 2022
இலங்கை நாட்டிலுள்ள நெருக்கடியான நிலமைகளைக் கருத்திற்கொண்டு நேற்று சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது அமுலிலுள்ள இந்த ஊரடங்குச் சட்டம் திங்கட் கிழமை காலை 6 மணி வரை அமுல்படுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை கொழும்பு நுகேகொட மிரிஹான பகுதியில் இரவு மக்களால் முன்னெடுக்கப்பட்ட (ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட) பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும்,
நாடளாவிய ரீதியில் பொது மக்களால் இன்று (ஞாயிறு) சுயமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பரந்த அளவிலான ஆர்ப்பாட்டங்கள் காரணமாகவே இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதார நெருக்கடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு போன்றவற்றின் விளைவான இடர்பாடுகளால் மக்களின் உணர்வலைகள் மற்றும் அரசு மீதான வெறுப்புணர்வு மேலோங்கிவரும் நிலையில் குறித்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தும் நிலமையும் நாட்டில் ஏற்பட்டுள்ளது.
இதனால் இன்று நாட்டின் பலமாவட்டங்களிலும் ஊரடங்குச்சட்டத்தினால் பல நகரங்கள், பிரதான போக்குவரத்து வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டன.
சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தைப் பொருட்படுத்தாது மக்கள் நடமாட்டம் வழமைபோன்று காணப்பட்டதெனினும் பாதுகாப்பு தரப்பினர் இதனைக் கண்டு கொள்ளாத வகையிலேயே இருந்தனர்.
இதேவேளை இலங்கையில் மீண்டும் அவசர காலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை உறுதிப்படுத்துவதற்காகவே நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் ஜனாபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர காலச்சட்டம் உடனடியாக மீளப்பெறப்பட்ட வேண்டுமென எதிர்க்கட்சிகளும், வேறுசில தரப்பினரும் அழுத்தமான கோரிக்கைகளை விடுத்துள்ளன.


உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House