
posted 27th April 2022
யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நல்லூர் கந்தன் ஆலயத்துக்கு இன்று திங்கட்கிழமை காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார்.
மதங்களுக்கிடையிலான ஒற்றுமை இலங்கையை இன்னும் சிறப்பாக்குவதாக நல்லூர் ஆலயத்தில் வழிபட்ட புகைப்படத்துடன் தனது ருவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
நேற்று சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)