நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு - சுரேஷ் பிரேமச்சந்திரன்
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு - சுரேஷ் பிரேமச்சந்திரன்

சுரேஷ் பிரேமச்சந்திரன்

தற்போதைய அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கையொப்பமிட்டமை சந்தர்ப்பவாதத்தனமான நடவடிக்கை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸை பொறுத்தவரை சிங்களத் தரப்பில் நடக்கின்ற விடயங்களுடன் தமிழர் தேசத்துக்கு சம்பந்தம் இல்லை என்று கடந்த காலங்களில் கூறினர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் எமது பிரச்சனைகள் பேசப்படும்போது ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கையைத்தான் இவர்கள் செய்கின்றார்களே தவிர இதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சனைகளில் மாற்றம் ஏற்படாது என்றனர்.

அதை நான் தவறு என்று கூறவில்லை. ஆனால் தற்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்து, கையெழுத்து வைப்பதென்பது அவர்கள் ஆட்சி மாற்றத்தைத்தான் வேண்டி நிற்கின்றார்களோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றாலும் கூட அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பாக சஜித் பிரேமதாஸவுடன் பேசினார்களா? எவ்வாறு அடுத்த கட்டத்தை கொண்டு போகப் போகிறார்கள்? நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அடுத்ததாக என்ன செய்யப்போகின்றார்கள்? போன்ற கேள்விகளுக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. இதனை தெளிவுபடுத்தவேண்டியது அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் கடமை. இது ஒரு சந்தர்ப்பவாததனமான நடவடிக்கை.

ஆட்சி மாற்றம் தேவையில்லை. ஆட்சி மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப்போவதில்லை என்று கூறியவர்கள் இன்று ஆட்சி மாற்றம்தான் வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு - சுரேஷ் பிரேமச்சந்திரன்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now



ENJOY YOUR HOLIDAY