
posted 23rd April 2022
யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாய் ஊரைச் சேர்ந்த புலவர் அமரர் சின்னையினாரின் "தென் உதயதாரகை" நூல் வெளியீட்டு வைபவம் அண்மையில் சாவகச்சேரி பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தில் பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில் ஆசியுரையை சிவஸ்ரீ கிருபாகரக்குருக்கள் வழங்கி விழாவினை ஆரம்பித்து வைத்திருந்தார்.
மேலும் நூல் வெளியீட்டு உரையை பலாலி ஆசிரிய கலாசாலை முன்னாள் அதிபர் கவிஞர் சோ. பத்மநாதனும், ஆய்வுரையை யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் எஸ். சிவலிங்கராஜா, விமர்சன உரையை தென்மராட்சி பிரதேச செயலக கலை கலாசார உத்தியோகத்தர் கு. ரஜீவன், ஏற்புரையை புலவர் சின்னையினாரின் பேத்தி திருமதி பூங்கோதை ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
நூலின் முதற்பிரதியை சிரேஷ்ட ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் பெற்றிருந்தார்.
மேலும் நிகழ்வில் கச்சாய் தமிழ் இலக்கிய மன்ற போசகரும், சட்ட ஆய்வாளருமான இ. சோதிநாதன், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசசபை உத்தியோகத்தர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY