
posted 14th April 2022
உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருப்பேன் என்று பறைசாற்றிய இயேசு, பணிவிடை பெற அல்ல பணிவிடை புரியவே என்று தன் சீடர்களின் பாதங்களை கழுவி, இறையரசுப் பணிக்குச் சான்று பகர்ந்த தன் மீட்புப்பணி தரணியில் திருத்தூதர்கள் வழி தொடர்ந்து நீடிக்கவும், அருட்சாதனங்களின் வழியாக அருளை அளவில்லாமல் ஆன்மாக்களின் மீது பொழியவும், விண்ணகம் நோக்கிய பயணத்தில் இருக்கும் நமக்கு வழிப்பணக் கொடையாகவும், இன்சுவை உணவாகவும், தன் உடலையும், இரத்தத்தையும் தானமாய் கொடுத்து, நற்கருணை என்ற திருவருட்சாதனத்தை ஏற்படுத்தி, நான் உங்களுக்கு அன்பு செய்தது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செய்யுங்கள் என்று அன்புக்கட்டளை வழங்கிய நன்நாளாகிய திருப்பாடுகளின் பெரிய வியாழன் (14.04.2022) திருச்சடங்கு மன்னார் மறைமாவட்டத்தில் ஒரு மூத்த பங்காக திகழும் புதுமைமிகு பேசாலை புனித வெற்றி அன்னை ஆலயத்தில் பங்குத் தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில், இப் பங்கில் இரண்டாவது அருட்பணியாளராக திகழும் அமலமரி தியாகி சபையைச் சார்ந்த அருட்பணி ஜெரோம் லெம்பேட் அடிகளார் ஆகியோர் இணைந்து இவ் வழிபாட்டை நடாத்தியபோது.

வாஸ் கூஞ்ஞ