
posted 10th April 2022
அச்சுவேலி வடக்கில் உள்ள திருமண மண்டபத்துக்கு பின்னால் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பிலேயே காங்கேசந்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட நிலையில் அவை ஜி.சி.ஆர் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் எம்.ஓ.ஆர். புத்தகத்தில் குறைத்து பொலிஸார் பதிவு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 9 ஆம் திகதி வீட்டில் இருந்த அனைவரும் மட்டக்களப்புக்கு சென்ற நிலையில் வீடு உடைத்து திருட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் இரண்டு சோடி தோடு மற்றும் வீட்டிலிருந்து உபகரணங்கள் என்பன திருட்டு போயிருந்தன.
மட்டக்களப்பு சென்றவர்கள் வீடு வந்து திரும்பிய போது வீட்டின் கதவு திறந்து இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் கலா விநோதன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அச்சுவேலி நகர் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை கைது செய்ததுடன் சான்று பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY