திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் முற்றாக எரிந்தது

யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அது முற்றாக எரிந்துள்ளது.

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மின் பிறப்பாக்கி இயந்திரம் என்பனவும் தீக்கிரையாகியுள்ளன.
காலையில் குறித்த வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் திடீரென ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டது. அதன் பின்னர் அந்தப் பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தமையால் அயலவர்களால் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் தீயணைப்புப் படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்து மின்ஒழுக்கினால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணத்தால் ஏற்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் முற்றாக எரிந்தது

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய