தாய் உள்ளத்தின் உள்ள குமுறல்.
தாய் உள்ளத்தின் உள்ள குமுறல்.

நாட்டில் நாளாந்தம் தற்பொழுது இடம்பெற்றுவரும் மின்சாரத் தடையால் நீண்ட மணி நேரம் நாட்டில் உள்ள மக்கள் இருளில் சங்கமித்து வருகின்றனர்.

மண்ணெணெய்க்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்றபொழுதும் ஏதோ குப்பி விளக்கிலாவது இருந்து விடலாம் என்று நினைத்தாலும் குழந்தை பிள்ளைகள் இருக்கும் இடத்தில் குப்பி விளக்கை வைத்து கண்ணயர முடியாத நிலை ஒன்று காணப்படுகின்றது

ஆகவே அரிக்கன் லாம்பு ஒன்று வாங்குவதற்காக பேசாலையில் உள்ள கடை ஒன்றை நாடியபோது இதன் விலையோ 4000 ரூபா என சொல்லி விட்டார்கள்.

பின் மன்னாரில் ஒரு கடையை இதற்காக நாடியபோது இதன் விலையோ 3000 ரூபா என தெரிவித்தனர்.

அட பாவி மன்னாருக்கும் பேசாலைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 13 கிலோ மீற்றர். தூரம் கூட கூட டொலரின் பெறுமதியும் அதிகரிப்பால்தான் இந்த லாம்பின் விலையும் அதிகரித்துள்ளதோ என கேள்வி எழுப்பப்பட்டது.

இது குழந்தையுள்ள ஒரு தாயின் உள்ளக் குமுறல்.

தாய் உள்ளத்தின் உள்ள குமுறல்.

வாஸ் கூஞ்ஞ