
posted 30th April 2022
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு கூட்டம் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கூட்டம் காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இடம்பெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியில் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்த குழப்பகரமான சூழலிற்கு பின்னர் இன்று குறித்த கூட்டம் இடம்பெற்றது. ஆயினும் ஊடகங்களிற்கு குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. குறித்த கூட்டத்தில் சிரேஷ்ட தலைவராக சட்டத்தரணி ப. சிறிதரனும், செயலாளர் நாயகமாக மீண்டும் வீ ஆனந்தசங்கரியும் ஏகமனதாக தெரிவானார்கள்.
நிர்வாகச் செயலாளராக க. பூலோகரட்ணமும், பொருளாளராக தி. சஞ்சயனும், இணைப்பொருளாளராக வேதாரணியனும் தெரிவாகினர். இளைஞர் பேரவை தலைவராக க. சபேசனும், மகளீர் பேரவை தலைவராக சூரியபிரதீபா வாசவனும், சட்டம் மற்றும் ஒழுங்கு தலைவராக ஐயம்பிளை யசோதரனும், தொழிற்சங்கத் தலைவராக சி. தயாபரனும் தெரிவாகியுள்ளனர்.
கூட்டத்தின் நிறைவில் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிதத் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த செயலாளர்நாயகம் வீ. ஆனந்தசங்கரி குறிப்பிடுகையில்,
நீண்ட காலத்தின் பின்னர் மீண்டும் உதய சூரியன் உதிக்கவுள்ளது. சிறந்த கட்சி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதன் ஊடாக எதிர்வரும் காலங்களில் தமிழர் விடுதலை கூட்டணி மீண்டும் பிரகாசிக்க உள்ளது என தெரிவித்தார்.
கருத்து தெரிவித்த கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான சிறிதரன் தெரிவிக்கையில்,
தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள் கடந்த நாட்களாக இருந்த குழப்பகரமான நிலை மாற்றப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கூட்டத்தில் ஏகமனாதாக புதியவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி 1979ம் ஆண்டுகளில் கொண்ட கொள்கையில் பயணிக்கும், தனி நாடல்ல, தமிழர்களிற்கான தனி அரசை பெற்று கொடுப்பதில் உறுதியுடன் செயற்படும் என அவர் தெரிவித்தார்.
மகளீர் பேரவை தலைவி ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,
தமழர் விடுதலைக் கூட்டணியில் நிர்வாக செயற்பாடுகளிற் பங்கெடுத்துள்ள நாம் எதிர்வரும் மே 18ம் திகதி தமிழர் விடுதலை கூட்டணி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய பின்னர் மக்களிற்கான அரசியல் பணியை முன்னெடுத்த செல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY