
posted 27th April 2022
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழுத் தலைவருமான கலாநிதி சு. ஜெபநேசனின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நினைவுத் தூவிக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சிவில் சமூக உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)