சிறுவனின் மரணம் - நியாயம் கோரி ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்

யாழ். சத்திரச் சந்தியில் கடந்த திங்கள்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த தாவடியைச் சேர்ந்த சிறுவன் அஜித்தன் அபிநயனின் மரணத்துக்கு முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி அராலி மத்தியில் நேற்று புதன்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை அராலி செந்தமிழ் சனசமூக நிலையத்தில் இருந்து ஆரம்பித்து அராலி சமுர்த்தி வங்கி அருகில் நிறைவுற்றது.

இதன்போது மக்களின் கோஷமாக ஒலித்தவை இவை;

‘அதிவேகத்தை குறைப்போம் விபத்துகளைத் தவிர்ப்போம்’

‘அபிநயனின் மரணத்திற்கு முறையான விசாரணை வேண்டும்’

‘மாணவர்களது உயிரைப் பறிக்காதே’

பதாதைகளைத் தூக்கி நியாயத்தைக் கோரி வீதியில் இறங்கினர் மக்கள். கோஷம் எழுப்பினர்.

சமூக செயற்பாட்டாளர் பி. தனுசியா தலைமையில் நடைபெற்ற இக் கவனவீர்ப்பில் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் க. இலங்கேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் மா. நாகரட்ணம், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

சிறுவனின் மரணம் - நியாயம் கோரி ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மக்கள்

எஸ் தில்லைநாதன்

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY