
posted 5th April 2022
வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இளைஞர்கள் சிலர் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்களவர் கிளர்ந்தெழுந்ததால் நீ வீட்டுக்குப் போ, பருப்பு விலை வானமளவு, எரிவாயுவை காண கிடைக்கவில்லை என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டவேளை, அவர்களின் பின்புறமாக நின்ற இளைஞரொருவர் குப்பைகள் அடங்கிய பெட்டியொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தூக்கி வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டபோதிலும் இளைஞர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்ததுடன், சிறிது நேரத்தில் போராட்ட இடத்துக்கு மறுமுனையில் இருந்த எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய