காளான் உற்பத்தி, பெறுமதிசேர் உணவு உற்பத்தி பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காளான் உற்பத்தி மற்றும் பெறுமதிசேர் உணவு உற்பத்தி தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வொன்று பிரதேச தொழில்நுட்ப உத்தியோகத்தர் தி. மயூராஜனன் தலைமையில் கிரானில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராஜா, உதவி விவசாயப் பணிப்பாளர் எஸ்.சித்திரவேல் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி கே. ரவிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்ட விவாசாய உதவிப் பணிப்பாளர் வி. பேரின்பராஜா, கிழக்குப் பல்கலைக்கழக விவசாயப் பிரிவு மாணவிகளான எம். தேனுஜா மற்றும் எஸ். கீர்த்திகா ஆகியோரால் காளான் வளர்ப்பின் அறிமுகம், காளான் உற்பத்தி மற்றும் உணவு தயாரிப்பு தொடர்பான பயிற்சிகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வைத்து விருட்சம் காளான் உற்பத்தியாளர் சங்கத்திற்கு பெறுமதிசேர் உற்பத்தியினை ஊக்குவிக்கும் முகமாக மின் அரைக்கும் இயந்திரமொன்று மானியமாகவும், 46 பயனாளிகளுக்கு 3 இலட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான காளான் உற்பத்தி உள்ளீடுகள் ஐம்பது வீத மானிய அடிப்படையிலும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காளான் உற்பத்தி, பெறுமதிசேர் உணவு உற்பத்தி பற்றிய விழிப்பூட்டல் நிகழ்வு!

ஏ.எல்.எம்.சலீம்

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY