காட்டு யானைகளின் அட்டகாசம்

கிளிநொச்சி - கண்டாவளை - மயில்வாகனபுரம் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு புகுந்த மூன்று காட்டு யானைகள் பயன்தரு மரங்களை அழித்துச் சென்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

15இற்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்கள், 50இற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் என்பன இவ்வாறு அழிக்கப்பட்டன என்று அந்தக் கிராம மக்களால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த மரவள்ளிகளையும் அழித்து யானைகள் துவம்சம் செய்துள்ளன.

இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காட்டு யானைகளின் அட்டகாசம்

எஸ் தில்லைநாதன்

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now





ENJOY YOUR HOLIDAY