
posted 11th April 2022
இலங்கையில் தமிழ் - சிங்கள புத்தாண்டு நெருங்கிவரும் நிலையில் கிழக்கிலங்கையின் பலபாகங்களிலும் புத்தாண்டு வியாபாரங்கள் களை கட்டி வருகின்றன.
விலைவாசி உயர்வு, பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் உணவுப் பொருட்கள், உடுதுணிகளைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அன்றாட தொழில்கள், வியாபாரங்களின் முடக்க நிலைகளால் அன்றாட வருமானமிழந்து தவிக்கும் மக்களும் ஏதோ ஒரு வகையில் தமிழ் - சிங்கள புத்தாண்டைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
பிற்போக்குத்தனமான, சீரற்ற பொருளாதார பின்னடைவால் உந்தப்பட்ட நாட்டில், அக்கஷ்டத்தை அன்றாடம் அனுபவிக்கும் மக்கள், இக் கடுமையான, அவஸ்தையான நிமிடங்களையும் ஜீரணித்து எதிர்வரும் 13, 14 ஆம் திகதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை, அழுகையுடனான ஆனந்தத்துடன் வரவேற்கத் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் விசேடமாக புத்தாண்டுக்கு முன்னரான இன்று திங்கட்கிழமையும், நாளை செவ்வாய்க்கிழமையும் பொது விடுமுறை தினங்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதனால் தொடர்ச்சியாக இன்று முதல் ஒரு வாரகால விடுமுறையை அனுபவிக்கும் வாய்ப்பு மக்களுக்கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அரச ஊழியர்கள் இந்த விடுமுறை வாய்ப்புடன் தமிழ் - சிங்கள புதுவருடத்தைக் கொண்டாடும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம்
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY