
posted 28th April 2022
சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை கல்முனையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
பலவிதமான துயர்களை பொறுத்துப் பொறுத்து, மனதில் அடங்கியிருந்த உள்ளக் கிடக்கைகளைப் பாதைகளில் வெளிக்காட்டி ..
“கோட்டா கோ ஹோம்”
“திருடிய பணத்தைத் திருப்பிக் கொடு”
“நாட்டை விட்டு ஓடு, அன்றேல் நாம் விரட்டுவோம்”
“நஞ்சு அருந்தி நாம் சாகத்தயார்”
“சவக் குழியில் சுகாதார சேவை”
“மியூசிக்கதிரை வேண்டாம்”
“நிதி நெருக்கடியால் உயிர்களைக் கொல்லாதே”
என்ற கோஷங்களுடன் வீதியில் இறங்கி போராட்டத்தைத் தொடங்கினர் சுகாதாரத்துறை ஊழியர்கள்.
கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் பணியாற்றும் பல்வேறு சுகாதாரத்துறை தொழிற் சங்கங்கள் சார்ந்த உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை முன்பாக பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், பல்வேறு கோஷங்களுடனும் பேரணியும் இடம்பெற்றது.
"நிதி நெருக்கடியால் உயிர்களைக் கொல்லாதே”
“திருடிய பணத்தை திருப்பிக்கொடு”
“கோட்டா வீட்டுக்குப்போ”
“ஊழல் அரசே வெளியேறு”
“வேண்டாம், வேண்டாம் கோட்டா வேண்டாம்”
“சால்வைக்கு சங்கூது”
“சால்வைகள் சவக்குளிக்குள்”
“கபுடுகாஃகா பஷீர்”
“கொல்லாதே கொல்லாதே அப்பாவிகளைக் கொல்லாதே”
“சுகாதாரம் எங்கள் அடிப்படை உரிமை”
“கோட்டா கோட்டா கோஹோம்”
போன்ற கோஷங்களை ஆரப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் எழுப்பியதுடன், அத்தகைய வாசகங்களைக் கொண்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)