கனவுகளை கண்ணில் வைத்து சாதிக்க துடிக்கிறோம்
கனவுகளை கண்ணில் வைத்து சாதிக்க துடிக்கிறோம்

டி சாதனா

தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தவர்கள் குடியுரிமைக்காக விழிப்புணர்வை முன்னெடுத்து செல்வதில் ஆர்வம் காட்டிவரும் ஒரு அங்கமாக மாணவி டிசாதனா எழுதியுள்ள கவிதை

பரமத்தி மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவியான வி. டிசாதனா, எழுதியிருந்த கவிதையில் இருந்து சில வரிகள் பின்வருமாறு பேசுகிறது;

இந்திய தாய் நாட்டு மண்ணில்
இனிய மலர்களாய் மலர்ந்தோம்.
அலை கடல் கடந்து வந்தோம்
தமிழ்நாட்டின் அரவணைப்பினை பெற்றோம்.
உதவிகள் பல செய்தாலும் – எங்களின்
அடையாளம் எண்ணி அழுதோம்.
பெரும் கனவுகளை கண்ணில் வைத்து
சாதிக்க துடிக்கிறோம் ..._*

என்று எழுதுகிறார்.

இந்த மாணவி, தமிழகத்தில் உள்ள முன்னணி தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற 'சூப்பர் சிங்கர்' பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்த ஓர் இசைக்குயில். போதிய பயிற்சி செய்ய வாய்ப்புகள் இன்றியும், தனது திறமையால் சாதித்த சாதனைப் பெண். ஒரு வானம் பாடியாய் உலகை வலம்வர வேண்டியவர். குடியுரிமை எனும் சட்டச் சிறையில் அடைக்கப்பட்ட வீட்டுக்குருவியாய் பெரும் கனவுகளை கண்ணில் வைத்துக்கொண்டு சாதிக்க துடிக்கிறார்.

கனவுகளை கண்ணில் வைத்து சாதிக்க துடிக்கிறோம்

வாஸ் கூஞ்ஞ