ஒற்றுமையைக் காக்கமுனைகையில் பிரிவு படுத்தாதீர்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஒரு கட்சியை வெளியேறுமாறு மற்றொரு கட்சியை சேர்ந்தவர்கள் கூறுவது பிழையான நடைமுறை. இதற்கு நிரந்தர தீர்வு காணும் நடைமுறையை விரைவில் உருவாக்குவோம் என தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் மகிழ்ச்சியடைவேன் என அண்மையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கல்வியியல் கல்லூரியில் 04.04.2022 அன்று நடந்த நிழ்வொன்றின் பின்னர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த த. சித்தார்த்தன்;

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஒரு கட்சியை வெளியேறுமாறு மற்றொரு கட்சியை சேர்ந்தவர் கூறுவது தவறானது. அப்படி ஒருவர் கூறி மற்றொரு கட்சி வெளியேறாது. வெளியேறவேண்டிய அவசியமும் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் பலப்படுத்தவே நாம் முயற்சிக்கிறோம். கூட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது.

கூட்டமைப்பில் உள்ள ஒரு கட்சியை சேர்ந்தவர், இன்னொரு கட்சியை வெளியேறுமாறு இஷ்டம் போல கூறுவதற்கெல்லாம் இடமளிக்கக்கூடாது. விரைவில் கூட்டமைப்பின் தலைவர்கள் கூடி, இதற்கான நிரந்தர ஏற்பாடொன்றை செய்வோம் என்றார்.

ஒற்றுமையைக் காக்கமுனைகையில் பிரிவு படுத்தாதீர்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு பதிவு செய்ய என்பதைக் கிளிக் செய்யுங்கள்>>>பதிவு செய்ய